தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்!!

மும்பை: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5% குறைத்தது. வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6%ல் இருந்து 5.5%ஆக குறைந்தது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தை நடத்தி, வட்டி நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான சீராய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்தார்.

இதன்படி, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.5 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கலாம்.2020 மே மாதத்துக்குப் பிறகு, முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களைச் சேர்த்து 1% ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா, "இந்திய பொருளாதாரத்தின்

அடிப்படை வலுவாக உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். சில்லறை விலை பண வீக்கம் 3.16 சதவீதமாக உள்ளது,"இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, நகைக்கடன் விதிமுறை தொடர்பான சு.வெங்கடேசன் கடிதத்துக்கு ஆர்பிஐ ஆளுநர் மல்கோத்ரா அளித்த பதிலில், "நகைக்கடன் தொடர்பான மக்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்படும். தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும். சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்"இவ்வாறு குறிப்பிட்டார்.

Related News