தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

17,459 பழுதான அரசு பேருந்துகளில் 13,528 பஸ்கள் சீரமைப்பு: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: 17,459 அரசு பேருந்துகளில் இருந்த பழுதுகள் கண்டறியப்பட்டு 13,528 பேருந்துகளில் பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பழுதுகள் அனைத்தும் திங்கட்கிழமைக்குள் சரி செய்யப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 10,125 வழித்தடங்களில் 20,260 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 18,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் அதிகப்படியான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
Advertisement

நாளொன்றுக்கு 1.76 கோடி பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இவற்றில் உள்ள பழைய பேருந்துகள் சீரான இடைவெளியில் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கப்படுகிறது. ஆனால், ஆயுட்காலம் முடிவடைந்த பேருந்துகளையும் இயக்கி வருவதாகவும், இதனால் பேருந்தை ஓட்டுவதற்கு சிரமமாக இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்து வந்தனர். இதனிடையே கடந்த வாரத்தில் சில இடங்களில் அரசு பேருந்துகள் சேதமடைந்தது குறித்து செய்திகள் வெளியானது.

இந்நிலையில், கடந்த வாரம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள், சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20 ஆயிரம் பேருந்துகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.

இதனையடுத்து அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு விரிவான அறிக்கையை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களும் சமர்ப்பித்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 17,459 அரசு பேருந்துகளில் இருந்த பழுதுகள் கண்டறியப்பட்டு 13,528 பேருந்துகளில் பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பழுதுகள் அனைத்தையும் திங்கட்கிழமைக்குள் (நாளை) சரி செய்யப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் பழுதடைதல் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10,000 கிலோ மீட்டருக்கு 0.10 என்ற அளவில் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது. ஊடகங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு வரும் பழுதுகள் உள்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார். அரசு பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 17,459 பேருந்துகளில் இருந்த பழுதுகள் கண்டறியப்பட்டு 13,528 பஸ்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

மேலும் மீதமுள்ள பழுதுகள் அனைத்தும் திங்கட்கிழமைக்குள் சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர பழைய பேருந்துகள் கழிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டிற்குள் 7,030 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகிறது. அதன் பின்னர் அனைத்து பழைய பேருந்துகளும் முழுமையாக கழிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News