ரெனால்ட் டஸ்டர் கார்
புதிய தலைமுறைக்கான ரெனால்ட் டஸ்டர் கார் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் காரின் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதன்படி இந்தக் காரில் ஒய் வடிவ எல்இடி டிஆர்எல்கள், பாலிகோனல் ஹெட்லாம்ப் உள்ளன. பம்பர், முன்புற கிரில்கள் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சி பில்லரில் பின்புற கதவு பிடி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட்டுடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.6 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக், 1.0 லிட்டர் பெட்ரோல் - எல்பிஜி வேரியண்ட்களில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement