1 கோடி பேரை நீக்குவார்கள்: அதிமுக மாஜி அமைச்சர் சொல்கிறார்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் சுகபுத்ராவிடம் நேற்று மனு அளித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே பெற ஆவண செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளோம். உண்மையான வாக்காளர்களை நிராகரிக்க கூடாது. போலி வாக்காளர்களை சேர்க்கக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. ஒவ்வொரு தொகுதியிலும் போலியான வாக்காளர்களை கண்டறிந்து களைய வேண்டும். ஒருவரின் வெற்றியை தோல்வியாக்கும், தோல்வியை வெற்றியாக்கும் போலி வாக்காளர்களை களைவது தேவையானது, வரவேற்கத்தக்கது. போலியான வாக்காளர்கள் 60 லட்சம் என்ன 1 கோடி இருந்தாலும் நீக்கத்தான் செய்வார்கள். தமிழகத்தில் இரட்டை வாக்கு யாருக்கும் இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.