தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்: கனிமொழி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழலை உருவாக்கிவிட்டது பாஜக. நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை எழுப்பினோம். ஆங்கிலேயர் வைத்த நில அளவை கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர். திடீரென்று ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட கல் மீது தீபம் ஏற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Advertisement

நீதிபதி தீர்ப்பை வைத்துக் கொண்டு பாஜகவினர் மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆகமவிதிகளை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் விளக்கு ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தி என சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள். மதம், பக்தியின் பெயரால் குளிர்காய நினைக்கிறது பாஜக; பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் தமிழ்நாடு செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க.வின் மதவாத அரசியலை தமிழ்நாடு அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் எங்காவது அமைதி நிலவுகிறதா?, மணிப்பூர் கலவரத்தில் இதேபோன்று பிரச்சனைதான் நடைபெற்றது. நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். உங்களுக்கும் கட்சிக்கும் நல்லதல்ல என மிரட்டும் தொனியில் கிரண் ரிஜிஜு பேசியது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

Advertisement