மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது.. ஆவணங்களில் மாற்றம் செய்து சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டும்: அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து!!
மதம் மாறுவது தொடர்பாக வாய்மொழியாகவோ அல்லது எழுத்துபூர்வமாகவோ தெரிவிக்க கூடாது என்றும், மதம் மாறுவது தொடர்பான ஆவணங்களை உரிய அதிகாரியிடம் முன்கூட்டியே அளித்து அரசு அடையாள அட்டை, ஆவணங்களில் முறையாக மாற்றம் செய்து சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதம் மாறியது தொடர்பான விளம்பரங்களை முன்னணி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் சட்டபூர்வமற்ற மத மாற்றத்தை உறுதி செய்ய முடியும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
பத்திரிக்கை விளம்பரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், வயது, முகவரி, மத்திய அரசிதழில் வெளியான அறிவிப்பாணை ஆகியவை இடம்பெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். மதம் மாற்றத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி முழுமையாக சரிபார்த்த பின்னரே அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், மதம் மாற்றம் தன்னார்வத்துடன் நடைபெற்றதா அல்லது திருமண சட்ட சிக்கல்களில் இருந்து விடுபட நடைபெற்றதா அல்லது அழுத்தம் காரணமாக நடைபெற்றதா என்பன குறித்து அவர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். இந்நிலையில் வழக்கு விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.