வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு
சென்னை: வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உப வடிநிலத்திற்கு (கிருதுமால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக வைகை அணையில் உள்ள இருப்பு மற்றும் எதிர் நோக்கும் நீர்வரத்து ஆக மொத்தம் 2008 மி.க.அடி நீரில், வருகின்ற 05.12.2025 முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 க.அடி வீதம் மொத்தம் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
Advertisement
Advertisement