கடந்த 12ம் தேதி 20,310 ஆவணங்கள் பதிவு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்: தமிழ்நாடு அரசு பதிவுத்துறை தகவல்
Advertisement
இந்நிலையில், கடந்த ஜூலை 12ம் தேதி ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் ஆடி மாதம் பிறக்க இருப்பதாலும் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ளவும் முன்பதிவு வில்லைகள் கிடைக்கவில்லை என சிரமப்படக்கூடாது என்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆவணப்பதிவிற்கான 100 வில்லைகள் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி கடந்த 12ம் தேதி 20,310 ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய சார்பதிவாளர்களால் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த 12ம் தேதி 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement