ஆந்திராவில் செம்மரக்கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் அடிக்கடி செம்மரக்கடத்தல் சம்பவங்கள் நடக்கிறது. இதுதொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Advertisement
இந்நிலையில் திருப்பதி மாவட்டம் கரகம்பாடி சரகத்தில் கடந்த 2017ம் ஆண்டு செம்மரம் கடத்தியதாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களான வெள்ளையன் என்கிற சிவாஜி, மோகன்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த திருப்பதி மாஜிஸ்திரேட் நரசிம்மமூர்த்தி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Advertisement