5வது டெஸ்டில் தகர்ந்த சாதனைகள்
* நேற்று முடிந்த 5வது டெஸ்டில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வென்றது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் அடைந்த வெற்றி இதுவே. இதற்கு முன், 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6000 ரன் கடந்த முதல் வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் சாதனை படைத்தார்.
* உள்ளூர் போட்டிகளில் 24 சதங்கள் விளாசிய முதல் வீரர் ஜோ ரூட்.
* இந்திய டெஸ்ட் கேப்டனாக அதிக ரன் குவித்த வீரராக, 754 ரன்னுடன் சுப்மன் கில் சாதனை படைத்தார். கவாஸ்கரின் 732 ரன் சாதனையை அவர் முறியடித்தார்.
* இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர்களில் 6 முறை 50க்கு கூடுதல் ரன் குவித்த முதல் வீரர் ரவீந்திர ஜடேஜா. இந்த தொடரில் 500 ரன்களை அவர் கடந்துள்ளார்.
* ஆட்ட நேரத்தின் கடைசி நேரத்தில் நைட் வாட்ச்மேன் வீரராக களமிறங்கிய இந்தியாவின் ஆகாஷ் தீப், 66 ரன் குவித்து சாதனை படைத்தார். இதற்கு முன், சையத் கிர்மானி (101 ரன்), அமித் மிஸ்ரா (50 மற்றும் 84 ரன்) இந்த சாதனையை புரிந்துள்ளனர்.
* 23 விக்கெட் வீழ்த்தி சிராஜ் முதலிடம்
இங்கிலாந்து அணியுடனான, ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நாயகனாக, இந்திய வீரர் முகம்மது சிராஜ் உருவெடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஜோஷ் டங்கை முந்தி, சிராஜ் 23 விக்கெட்டுகளுடன் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த தொடரில்
அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்
வீரர் போட்டி விக்கெட்
முகம்மது சிராஜ் 5 23
ஜோஷ் டங் 3 19
பென் ஸ்டோக்ஸ் 4 17
ஜஸ்பிரித் பும்ரா 3 14
பிரசித் கிருஷ்ணா 3 14