திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஓசூர்: முதலீடுகளில் நமது சாதனையை நாம்தான் முறியடித்து வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்துறையில் தமிழ்நாடு வேகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில்துறையில் வேகமாக செயல்பட காரணம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. தமிழ்நாடு தொழில்துறையில் இவ்வளவு வேகமாக செயல்பட முக்கிய காரணம் துடிப்பான, இளமையான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாதான். கடந்த மாதம் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் ஆலையை தொடங்கி வைத்து முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றேன். முதலீட்டாளர்களின் ஆர்வமும் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடன் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்தோம். தொழில்துறைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தி தொழில் செய்யும் சூழலை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தான் முதலீட்டாளர்கள் சந்திப்பை தொடர்ந்து நடத்தி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர் என்று கூறினார்.