தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க யூஏ7+, யூஏ13+, யூஏ16+ பிரிவுகள் அறிமுகம்: தணிக்கை வாரியம் நடவடிக்கை

புதுடெல்லி: மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இதுவரை திரைப்படங்களை “யூ”, “ஏ” மற்றும் “யூஏ” ஆகிய பிரிவுகளில் திரையிடுவதற்கான அனுமதி வழங்கி வந்தது. மாறி வரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு கடந்த அக்டோபர் 24ம் தேதி முதல் அனுமதி வழங்கும் திரைப்படங்கள், “யூ”, “ஏ”, “யூஏ7 ”, “யூஏ 13 ”, “யூஏ 16 ” என்னும் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் “யூ” வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும் உகந்தவையாகும்.

“ஏ” வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயது கடந்தவர்கள் மட்டுமே காண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை. அதற்குக் குறைவான வயதுடையவர்கள் காண அனுமதி இல்லை. திரைப்படங்களில் குழந்தைகளுக்கு ஒவ்வாத வன்முறை/ பயமுறுத்தும் காட்சி அமைப்புகள், நெருக்கமான அல்லது கிளர்ச்சியூட்டும் காட்சிகள், அடிமைப்படுத்தும் பழக்கங்கள், விபரீதமான நடத்தைகள் போன்ற அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அவை பார்வையாளர் மேல் உண்டாக்கும் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக “யூஏ7 ”, “யூஏ 13 ”, “யூஏ 16 ” என வகைப்படுத்தப்படும்.

“யூஏ7 ”, “யூஏ 13 ”, “யூஏ 16 ” என்று பரிந்துரைக்கப்படும் திரைப்படங்களில், தங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் அந்த திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு திரைப்படத்தின் சான்றிதழ் (வயது மதிப்பீடு) விவரங்களை அறிய, பெற்றோர்கள் cbfcindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.