தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடனமாடும்படி வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்: மாப்பிள்ளையின் நண்பர்களால் விபரீதம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞருக்கும் காவேரிப்பட்டணத்தில் உள்ள திருமண மண்டபத்தில், கடந்த 27ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 26ம் தேதி மாலை, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்தனர். இரவு 10 மணியளவில், மணமகனின் நண்பர்கள் சிலர், மது போதையில் மண்டபத்தில் குத்தாட்டம் போட்டனர்.

Advertisement

போதை உற்சாகத்தில், மேடையில் ஏறிய நண்பர்கள், மாப்பிள்ளையையும் ஆடச்சொல்லி வற்புறுத்தினர். சிறிது நேரத்தில் மணப்பெண்ணையும் நடனமாடுமாறு கட்டாயப்படுத்தினர். இதை கண்ட உறவினர்கள் அவர்களை கண்டித்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, பெண் வீட்டாரை மணமகனுடன் வந்த நண்பர்கள் சிலர் தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண், திருமணத்திற்கு முன்பே இப்படி நடந்து கொள்கிறார்களே, இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்ன ஆகும்? என்றார்.

பின்னர், அந்த நபரை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் வரவேற்புடன் திருமணம் பாதியில் நின்றது. மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் அவரவர் ஊருக்கு திரும்பினர்.

இதனிடையே, காலையில் திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என எண்ணி, பலரும் மண்டபத்திற்கு சென்றார்கள். ஆனால், திருமண மண்டபம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு விசாரித்த போது, முதல்நாள் இரவு வரவேற்பில் ஏற்பட்ட பிரச்னையில் திருமணம் நின்று போனதை அறிந்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் போதையில் வந்த மாப்பிள்ளையின் நண்பர்களால், திருமணம் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News