தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜடேஜாவின் போராட்ட குணம் பாராட்டத்தக்கது; முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்காததே தோல்விக்கு காரணம்: கேப்டன் கில் பேட்டி

Advertisement

லண்டன்: லார்ட்சில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 387 ரன்கள் குவித்தன. 2வது இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தரின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற மேலும் 135 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தது. ஆனால் ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, தனி ஆளாக போராடிய ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்தார்.

கடைசி விக்கெட்டை பறிகொடுக்காமல் தாக்குபிடித்த சிராஜ் எதிர்பாராதவிதமாக பஷிர் பந்துவீச்சில் போல்டானார். இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் கில் கூறுகையில் ``நாங்கள் விளையாடிய விதம் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். ஒன்றிரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நிச்சயம் இந்தப் போட்டி மாறியிருக்கும். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர்.

ஜடேஜா அனுபவமிக்க வீரர். அவருக்கு களத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். கீழ் வரிசை வீரர்களுடன் இணைந்து அவர் பிரமாதமாக செயல்பட்டார். அவரின் போராட்ட குணம் பாராட்டத்தக்கது. முதல் இன்னிங்சில் நாங்கள் கூடுதலாக 80, 100 ரன்கள் அடித்திருந்தால் அது நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். எனவே முதல் இன்னிங்ஸில் நாங்கள் பெரிய ஸ்கோர் எடுக்காதது தான் தோல்விக்கு காரணம் என நினைக்கின்றேன். ஆனால் உண்மையிலேயே இந்த டெஸ்ட் போட்டியில் எங்கள் அணி வீரர்கள் சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

ஆர்ச்சர் எங்களின் துருப்புச்சீட்டு

பேட்டிங்கில் 44, 33 ரன்கள், பந்துவீச்சில் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வெற்றி குறித்து அவர் கூறுகையில், ``இது மிகவும் சிறப்பான வெற்றி. 6 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டில் இதே நாளில், இதே மைதானத்தில் நாங்கள் உலக கோப்பையை வென்றோம். அந்தப் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஆர்ச்சர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது.

நேற்று பிரைடன் கர்ஸ் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்த பிறகும் எனக்கு ஜோப்ரா ஆர்ச்சர் தான் காலையில் பந்து வீச வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தது. அவர் அணிக்கு திரும்பியது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. எங்களுக்கு மிகவும் முக்கியமான விக்கெட்டுகளை அவர் வீழ்த்திக் கொடுத்திருக்கிறார். ஆர்ச்சர் தான் எங்களின் துருப்புச் சீட்டு. சோயிப் பஷிருக்கு ஒரு கை உடைந்து இருந்தது. அதையும் மீறி அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் ஈடுபட்டார். பன்ட் எவ்வளவு பெரிய அபாயகரமான வீரர் என்று நம் அனைவருக்குமே தெரியும். நான் ரிஷப் பன்டை ரன் அவுட் செய்தது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது’’ என்றார்.

தோல்வி ஏமாற்றமளிக்கிறது

சமூக வலைத்தளத்தில் ஜாம்பவான் சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், ``நாம் வெற்றியின் அருகே வரை வந்து விட்டோம். ஆனாலும் வெற்றி தூரமாக மாறிவிட்டது. ஜடேஜா, பும்ரா, சிராஜ் கடுமையாக கடைசிவரை வெற்றிக்காக போராடினார்கள். இந்திய அணி வெற்றிக்காக சிறப்பான முயற்சியை எடுத்திருக்கிறது. இதே போல் இங்கிலாந்து அணியும் நமக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக சிறப்பாக செயல்பட்டனர். இதன் மூலம் அவர்கள் ஆசைப்பட்ட முடிவு கிடைத்துவிட்டது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்று கூறி உள்ளார்.

Advertisement