தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரியல் எஸ்டேட் துறையில் நீண்டகால மூலதன ஆதாய வரி குறைத்ததால் அதிக நன்மையே: வருமான வரித்துறை சொல்கிறது

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் நீண்டகால மூலதன ஆதாய வரி 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இதில் வழங்கப்பட்டு வந்த இண்டெக்சேஷன் சலுகை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை விற்கும் போது அதில் கிடைக்கும் லாபத்திற்கு விதிக்கப்படும் நீண்டகால மூலதன ஆதாய வரி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.
Advertisement

ஆனால், வரி செலுத்துவோருக்கு அதிக நன்மையே கிடைக்கும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவாக ரியல் எஸ்டேட் முதலீடுகள் மீதான லாபம் ஆண்டுக்கு 12-16 சதவீதம் கிடைக்கும். இது பணவீக்கத்தை விட அதிகம். பணவீக்கமானது குறிப்பிட்ட காலத்தைப் பொறுத்து, 4-5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனவே, இண்டெக்சேஷன் சலுகை நீக்கப்பட்டு, மூலதன ஆதாய வரி குறைக்கப்பட்டதால் பெரும்பாலும் வரி செலுத்துவோர் கணிசமான வரி சேமிப்பை பெற முடியும்.

உதாரணத்திற்கு 5 ஆண்டு ஒரு சொத்தை வைத்திருந்தால் அதன் மதிப்பு 1.7 மடங்கு அல்லது அதற்கு அதிகமாக உயரும். அதுவே, 10 ஆண்டுகள் வைத்திருந்தால் சொத்து மதிப்பு 2.4 மடங்கு அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் போது, இந்த புதிய நடைமுறை பயனளிக்கும். 2009-10ல் வாங்கிய சொத்துக்கு தற்போது 4.9 மடங்கு அல்லது அதற்கு மேல் மதிப்பு அதிகரித்திருந்தால் பணவீக்கத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் நன்மையே கிடைக்கும்.ஆண்டுக்கு 9-11 சதவீதம் குறைவான மதிப்பு உயர்வு இருந்தால் மட்டுமே முந்தைய வரி விகிதத்தால் நன்மை கிடைக்கும். ஆனால் ரியல் எஸ்டேட்டில் இது நம்பத்தகாதது மற்றும் அரிதானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News