மாஸ்கோவை தாக்க தயார் - டிரம்பிடம் ஜெலன்ஸ்கி உறுதி
Advertisement
வாஷிங்டன்: நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா தந்தால் மாஸ்கோவை தாக்கத் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரோமில் கடந்த வாரம் ஜெலன்ஸ்கியுடன் நடந்த சந்திப்பில் 14 ஆயுதப் பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் தந்தனர். ஜெலன்ஸ்கியை டிரம்ப் சந்தித்தபோது மாஸ்கோவை தாக்க முடியுமா என கேட்டதாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகள் தந்தால் மாஸ்கோ மீது வீசத் தயார் என்று ஜெலன்ஸ்கி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெலன்ஸ்கி, டிரம்ப் பேச்சு விவரங்களை அமெரிக்காவின் பைனான்ஷிய டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
Advertisement