ஆர்சிபி அணி ரூ.17ஆயிரம் கோடிக்கு விற்பனையா?
ஆர்சிபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஆர்சிபி அணியை 17,128 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டியாஜியோ இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவ்வாறு திட்டம் எதுவும் இல்லை என அந்த நிறுவனம் மறுத்துள்ளது.