கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுமியை காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு!!
புதுக்கோட்டை: கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுமியை தொடர்ந்து ஒரு வரம் சிகிச்சை அளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இடைவிடாமல் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே குலவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி, பாப்பாத்தி தாம்பத்தினரின் 6 வயது மகள் மதுஸ்ரீக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டது. கண்கள் திறக்க முடியாமல் இருந்த சிறுமியை முதலில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு கண்டறியபடாததால் 24க்கு மணிக்கு நேரத்திற்கு பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ குழுவினர் கட்டுவிரியன் பாம்பு கடித்தால் தான் இது மாதிரியான பாதிப்பு வரும் என்று கூறி விஷ முறிவு மருந்து கொடுத்து சிகிச்சை தொடங்கினர். ஒரு வாரம் இடைவிடாமல் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்களுக்கு சிறுமியின் தாய் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். பாம்பு கடித்து 24க்கு மணி நேரத்திற்கு பிறகு வந்த போதிலும் துரிதமாக செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய அரசு மருத்துவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.