தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
Advertisement
ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிப கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
Advertisement