தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரத்தன் டாடா, கூகுள் பெயரை சூட்ட தெலுங்கானா அரசு முடிவு!!

ஹைதராபாத்: தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத்தின் மிக முக்கிய சாலைக்கு 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கு தெலங்கானா அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், ஹைதராபாத்தில் ரவிர்யாலாவில் நேரு வெளிவட்டச் சாலையை இணைக்கும் புதிய க்ரீன்பீல்டு சாலைக்கு, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. முன்னதாக ரவிர்யாலா மாற்று சாலைக்கு 'டாடா இண்டர்சேஞ்ச்' என்று பெயர் மாற்றப்பட்டது. கூகுள் நிறுவனத்தை கவுரவிக்கும் விதமாக, ஹைதராபாத்தின் முக்கிய சாலைக்கு 'கூகுள் தெரு' என்று பெயரிடப்பட இருக்கிறது. அதேபோல, மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் பெயர்களையும் சாலைகளுக்கு வைப்பது தொடர்பாக தெலங்கானா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Advertisement