ராசிபுரம் அருகே தீயணைப்பு துறை அதிகாரி வீட்டில் 35 சவரன் நகை, இருசக்கர வாகனம் திருட்டு
10:51 AM Jun 19, 2024 IST
Share
நாமக்கல்: ராசிபுரம் அருகே தீயணைப்பு துறை அதிகாரி அழகப்பன் வீட்டில் 35 சவரன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அழகப்பன் தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்னை சென்றுள்ள நிலையில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வீடு முழுவதும் மஞ்சள் மற்றும் மிளகாய்பொடியை தூவிச் சென்றுள்ளனர்.