ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு 512 ரன்: முதல் இன்னிங்சில் நாகாலாந்து திணறல்
பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நேற்று, நாகாலாந்து அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி 512 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய நாகாலாந்து முதல் இன்னிங்சில் 4 விக். இழந்து 150 ரன் எடுத்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின. 2ம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடர்ந்த தமிழ்நாடு அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆந்த்ரே சித்தார்த் 65 ரன்னில் அவுட்டனார். அதையடுத்து, 3 விக்கெட் இழப்புக்கு 512 ரன்னுடன் தமிழ்நாடு டிக்ளேர் செய்தது. பின்னர், நாகாலாந்து முதல் இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர் செடேஸாலி ரூபெரோ 6, ஹேம் சேத்ரி, கேப்டன் ரோங்சென் ஜோனாதன் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் நாகாலாந்து 58 ஓவரில், 4 விக்கெட் இழந்து 150 ரன் எடுத்திருந்தது. நாகாலாந்து அணி, 362 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்கிறது.