ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஜெகதீசன் தலைமையில் தமிழக அணி அறிவிப்பு: அக். 11ல் போட்டி துவக்கம்
சென்னை: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடும் தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை (2025-26) கிரிக்கெட் போட்டி அக்.11ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் விதர்பா, முன்னாள் சாம்பியன்கள் தமிழ்நாடு, மும்பை, கர்நாடகா, பரோடா, பெங்கால் உட்பட 38 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் தமிழ்நாடு எலைட், டி பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரஞ்சி தொடரில் விளையாட உள்ள தமிழ்நாடு அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவது போல், டிஎன்சிஏ அணிகளில் 4 வெளி மாநில வீரர்கள் இடம் பெறுவது வாடிக்கையாகி விட்டது. இப்போது கூடுதலாக துணைக் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. டிஎன்சிஏ அறிவித்த ரஞ்சி கோப்பைக்கான அணியில் நாரயண் ஜெகதீசன் தலைமையிலான அணியில் 14 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம்: என்.ஜெகதீசன்(கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (துணைக் கேப்டன்), திரிலோக் நாக், சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், பாபா இந்தரஜித், ஷாருக்கான், விமல்குமார், பி.சச்சின், ஆந்த்ரே சித்தார்த், ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், பி.வித்யூத். டி.டீ.சந்திரசேகர், சி.வி.அச்யூத், ஹேமசுதேசன், ஜி.அஜிதேஷ் (விக்கெட் கீப்பர்).