8ம் தேதி ரஞ்சி கோப்பை காலிறுதி விதர்பா அணியுடன் தமிழகம் மோதல்
லீக் சுற்று முடிவில், தமிழ்நாடு, சவுராஷ்டிரா, குஜராத், அரியானா, மும்பை, விதர்பா, ஜம்மு - காஷ்மீர், கேரளா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றன. காலிறுதி போட்டிகள் வரும் 8ம் தேதி நடக்க உள்ளன. நாக்பூரில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, விதர்பா அணியுடன் மோதவுள்ளது. தவிர, ஜம்மு காஷ்மீர் - கேரளா, அரியானா - மும்பை, சவுராஷ்டிரா - குஜராத் அணிகள் காலிறுதியில் மோதவுள்ளன.