தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணிப்பேட்டை முதல் ஆந்திரா எல்லை வரை ரூ.1,338 கோடி செலவில் நான்கு வழிச்சாலை பணி

*சாலையோர மரங்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Advertisement

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை முதல் ஆந்திரா எல்லை வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. சாலைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக உள்ளன. இதனால் நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

எந்தவொரு நாட்டிற்கும் சாலை உட்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி உறுதி செய்யப்படும். மேலும், ஓர் இடத்தில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகளை மற்றொரு இடத்திற்குக் குறைந்த செலவில் எடுத்துச் செல்வதிலும் சாலை உட்கட்டமைப்பு முக்கியமானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே தற்போதுள்ள ஒன்றிய அரசு சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா, மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தின் வர்த்தக போக்குவரத்துக்காக, வாலாஜாபேட்டையில் இருந்து ராணிப்பேட்டை, திருவலம், சேர்க்காடு கூட்ரோடு வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட எல்லை வரை 28 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2010ம் ஆண்டு முடிவு செய்தது.

பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இத்திட்டத்திற்கு, மத்திய நெடுஞ்சாலை துறை ரூ.1,338 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 40இன் ஒரு பகுதியாக அமையும் இந்த திட்டம் அப்பகுதிக்கு முக்கிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாலாஜா, ராணிப்பேட்டை நகருக்கு வெளியே 16 கிராமங்கள் வழியாக சுமார் 150 அடி அகலத்தில் இச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாகவும், வாலாஜா, ராணிப்பேட்டைக்கு 10 கி.மீ., தூரம் புறவழிச்சாலையாகவும் அமைக்கப்பட உள்ளன. இதில், 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே பாலங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை, வேலூர், சித்தூர், திருப்பதி மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் மேம்படும். இதற்காக சாலை விரிவாக்க பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள், சாலையோரம் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

இச்சாலை பெல் நிறுவனத்தை ஆதரிக்கும் தோல் மற்றும் சிறிய அளவிலான பொறியியல் உட்பட உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும். ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 2025ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை அப்பகுதிக்கு உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 2-வழிச் சர்வீஸ் சாலை உள்ளூர் போக்குவரத்தை உறுதி செய்கிறது.

மேலும், இந்த நெடுஞ்சாலையை வாகனங்கள் அணுக சில பகுதிகளில் மட்டுமே பாதை இருக்கும். இதன் மூலம் வாகனங்கள் தங்கு தடையில்லாமல் வேகமாகச் செல்ல முடியும். என்.ஹெச் 40ல் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 40 என்பது, முன்பு இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் 4 மற்றும் 18 ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாகும்.

இந்த நெடுஞ்சாலை ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பில் தொடங்குகிறது. இது கடப்பா மற்றும் சித்தூர் வழியாக ராணிப்பேட்டை வரை நீள்கிறது. ஏற்கனவே கர்னூல் முதல் கடப்பா வரையிலான பகுதி நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரையிலான பகுதியையும் 4 வழிச்சாலையாகத் தரம் உயர்த்த ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News