Home/செய்திகள்/Rameswaram Seizure Painreliever Pills Stashed Car
ராமேஸ்வரம் அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50,000 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
10:39 AM May 24, 2024 IST
Share
மண்டபம்: இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50,000 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் அருகே வேதாளையில் சந்தேகத்துக்கு இடமான கார் நின்று கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சோதனையிட்டதில் 10 பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.