ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை: பாம்பன் பாலத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே லேசான மழை பெய்து வந்தது. தற்போது பாம்பன் பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லக்கூடிய நிலை உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்தது.
பலத்த சூரைக்காற்று காரணமாக விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இருந்தபோதும் தூண்டில் வளைவு இல்லாததன் காரணமாக சூறைக்காற்று மற்றும் கனமழையால் படகுகள் சேதமடைய கூடிய நிலைஉள்ளது.