ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக ஐந்து இடங்களை அடையாளம் கண்டுள்ளது தமிழ்நாடு அரசு!!
Advertisement
இந்த ஐந்து இடங்களிலிருந்து மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையம் சாத்தியக்கூறு அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அடுத்த ஆண்டுக்குள் ஒரு இடத்தை அரசு தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க சுமார் 700 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒரு ஓடுபாதையுடன், கோட் சி விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட விமான நிலையத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
Advertisement