மதுரை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழாவை 10 நாட்கள் நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் விழாவை 10 நாட்கள் நடத்த இயலுமா? என கோவில் நிர்வாகம் பதில்தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுமீது ஐகோர்ட் மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.