தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தை போல மாறிவிட்டார்; ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்: அன்புமணி காட்டம்

சென்னை: ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. தற்போது பாமக யாருக்கு என்ற போட்டியில் இருவரும் இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பு பாமகவை அங்கீகரித்துள்ள சூழலில், ராமதாஸ் தரப்பில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இதனிடையே மாம்பழ சின்னத்தை கைப்பற்ற அடுத்தக்கட்ட நடவடிக்கையை இருவரும் மேற்கொண்டு வரும் நிலையில், அன்புமணிக்கு தேவையென்றால் தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய ராமதாஸ், என் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்தார். பாமகவை நான் உருவாக்கினேன். கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்த கொண்டாடவோ வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும். பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. புதிய கட்சியை தொடங்கியோ அல்லது வேறு ஒரு கட்சியிலோ இணைந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 3 மாதங்களில் யார் யார் சிறைக்கு செல்கிறார்கள் என்று பாருங்கள் என நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி தெரிவித்துள்ளார். அதில்,

ஜி.கே.மணி சூழ்ச்சி செய்தார் - அன்புமணி

என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்து ஜி.கே.மணி சூழ்ச்சியை தொடங்கிவிட்டார். ஜி.கே.மணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி ஜி.கே.மணியை நீக்குவது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும்.

ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார்

தூக்கம் இல்லாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என மாமல்லபுரத்தில் அன்புமணி பேச்சு. ராமதாஸை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். பேசினார். டெல்லியில் 30 பேரை வைத்து போராட்டம் நடத்திவிட்டு 3,000 பேரை வைத்து போராடியதாக கூறுகிறார்கள்.

 

Advertisement