ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்
07:37 AM Nov 25, 2024 IST
Share
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாக உள்ளதால் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விசைப்படகுகளை ஒன்றுக்கொன்று இடைவெளிவிட்டு நங்கூரமிட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்த அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.