ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் தொற்று தாக்கி சிறுவன் உயிரிழந்தான். ராமநாதபுரம் அண்ணாநகர் குருவிக்கார காலனி தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகன் ராஜபிரகாஷ் (17) இவர் சின்னக்கடை பகுதியில் இருக்கக்கூடிய கறிக்கடைக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரை தெருநாய் ஒன்று துரத்தி கடித்துள்ளது. அதனை தொடர்ந்து அவருடைய பெற்றோர் அவருடைய செயல்பாடுகளை, கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவருக்கு ரேபிஸ் இருப்பதாக தெரியவந்தது.
பின்னர் ராமநாதபுரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த நிலையில், அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத்த கட்சி அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் முழுவதுமே தெருநாய்கள் ஆங்காங்கே சுற்றித்திருக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.