ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதி ரத்து!!
சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது ONGC-க்கு விளக்கம் கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்ட தகவல் அண்மையில் வெளியானது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அனுமதியை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது.
Advertisement
Advertisement