களைகட்டிய தேர்தல் திருவிழா.. ராமநாதபுரத்தில் தேர்தல் விளம்பரங்கள், கட்சிக்கொடிகளின்றி காட்சியளிக்கும் கொம்பூதி கிராமம்..!!
Advertisement
அரசியல் வேறுபாட்டால் எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காகவே பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை தொடர்வதாக கொம்பூதி கிரம மக்கள் கூறுகின்றன. வேட்பாளர்கள் தங்கள் ஊர்களில் பரப்புரை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும், இருப்பினும் தங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் எந்த கட்சி சார்பிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது இல்லை என்று தெரிவிக்கின்றனர். இதுபோக கிராமத்தில் வீதிதோறும் சிசிடிவி கேமராக்களையும் கொம்பூதி மக்கள் பொறுத்தியுள்ளனர்.
Advertisement