“எனக்கு ஓய்வே கிடையாது..” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராமதாஸ் பேட்டி
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அக்.5ஆம் தேதி ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்காக ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ராமதாஸை முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன், நயினார் நாகேந்திரன், துரை வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை முடித்து கொண்டு ராமதாஸ் தற்போது தனது வீட்டிற்கு புறப்பட்டார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா என்ற கேள்விக்கு, எனக்கு ஓய்வே கிடையாது என ராமதாஸ் பதிலளித்தார். எந்த குறையும் இல்லை, எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்றும் கூறினார்.