அன்புமணி பொதுக்குழு - ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
சென்னை: அன்புமணி நடத்திய பொதுக்குழுவுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் நிறுவனரை அழைக்காமல் சட்டவிரோதமாக அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ளதாக புகார் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் சூழலையே அன்புமணி மாசுபடுத்துகிறார். அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது. கட்சி நிறுவனர், தலைவர் ஒப்புதலின்றி தன்னிச்சையாக பதவிக் காலத்தை அன்புமணி நீட்டித்துள்ளார். அன்புமணியிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.