தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஐயா...ஐயா.. என்று சொன்னவர்களை ராமதாஸ் என சொல்ல வைத்தவர்: பணம் மூட்டைகளை வாரி கொட்டி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு பாமகவை பறிக்க அன்புமணி சூழ்ச்சி

* கிளையை வெட்டி ஆலமரத்தை சாய்க்கப்பார்க்கிறார்

* கட்டுக்கடங்காத மனக்குமுறல் இருப்பதாக ராமதாஸ் கண்ணீர்

திண்டிவனம்: ஐயா...ஐயா... என்று சொன்னவர்களை ராமதாஸ் என பெயர் சொல்ல வைத்தவர் அன்புமணி. பாமகவை பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி என்று கட்டுக்கடங்காத மனக்குமுறல் இருப்பதாக ராமதாஸ் கண்ணீர் பேட்டியளித்து உள்ளார். பாமக நிறுவனர், தலைவர் ராமதாசுக்கும், அவரது மகனும் செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இருவரும் போட்டி பொதுக்குழு கூட்ட தேதியை அறிவித்துவிட்ட நிலையில், அன்புமணி பொதுக்குழு கூட்ட எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை சட்டப்படி சந்திப்போம் என அன்புமணி ஆதரவு வழக்கறிஞரான பாலு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்புமணி நிறைய பொய்களையும், கட்டுக் கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். நான் அவரை சந்திக்க மறுத்ததாக கட்சி நிர்வாகிகள் கூறி வருகிறார். நான் நிறுவிய கட்சியின் துணை அமைப்புகளான 34 அமைப்புகளின் செயலாளர், தலைவர்கள் அனைவரையும் வளைத்துபோட்டு காசு கொடுத்து எனக்கு எதிராக பேசச் சொன்னார். கட்சியில் வழக்கறிஞர் ஒருவர் என்னை ராமதாஸ் என்று அழைக்கிறார்.

ஐயா... ஐயா... என்று அழைத்தவரை ராமதாஸ் என்று அழைக்க வைத்தது அன்புமணிதான். தற்போது கட்சிக்கு அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறது, சின்னமும் போச்சு. கூட்டணி சம்பந்தமாகவும், வேட்பாளர் நியமனம், கட்சி சின்னம் பெறுவது சம்பந்தமாகவும், அங்கீகாரம் பெறுவது சம்பந்தமாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் நான் வழிநடத்துகிறேன் என்று முடிவெடுத்தேன். அதற்கு அன்புமணி ஒப்புக் கொள்ளவில்லை. நான் தான் முடிவெடுப்பேன், நான்தான் வேட்பாளரை முடிவு செய்வேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார். கட்சி பொறுப்பாளர்களை மாற்றும் அதிகாரம் எனக்குதான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

அப்படி என்றால் எனக்கு என்ன அதிகாரம். நான் உருவாக்கிய கட்சியில் நான் முடிவெடுக்கக் கூடாது என்று என்னை நிர்பந்தம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. என்னால் டம்மியாக இருக்க முடியாது. வஞ்சனையால் சூதுவால் பாமகவை நான் தான் என அன்புமணி உறிஞ்சி எடுத்துக் கொள்வேன் என்கிறார். பணம், கார் கொடுத்து என் மீது உயிரையே வைத்திருந்த சிலரை அன்புமணி பக்கம் இழுத்துள்ளார். அன்புமணியை எம்பி ஆக்கியபோது தன்பக்கம் கட்சியை இழுக்க வேண்டுமென உள்ளடி வேலைகளை பார்க்கத் துவங்கினார்.

கட்டுக்கடங்காத மனக்குமுறலை ஊடகம் முன்பு கூறுவதன்மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறேன். நான் பொதுக்குழு அறிவித்தவுடன் போட்டியாக அன்புமணி பொதுக்குழு அறிவிக்கிறார். தந்தைக்கே ஒட்டு கேட்பு கருவி வைத்தது எந்த விதத்தில் நியாயம். உலகத்தில் எங்கேயாவது நடந்து இருக்கிறதா. அன்புமணி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது. கட்சியில் குழப்பத்திற்கு இடமில்லை, அன்புமணி நடத்துவது கட்சியே கிடையாது. பணத்தை வைத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* போனவர்கள் திரும்பி வாங்க...

‘மாம்பழ சின்னம் ஒதுக்கியதாக கூறுவது பொய்யானது. தேர்தல் நேரத்தில் மட்டுமே சின்னம் ஒதுக்கீடு செய்வார்கள். பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள். கட்சியின் அங்கீகாரமும், சின்னமும் போய்விட்டது, தன்னை சட்டமன்ற உறுப்பினராக அன்புமணி ஆக்கிவிடுவார் என சிலர் அவரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரியாமலே அன்புமணி வீட்டில், கட்சி அலுவலகத்தை அவரது வீட்டிற்கு மாற்றி உள்ளார். கட்சியாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் தைலாபுரம் தோட்டம்தான். சட்டப்படியும் தேர்தல் ஆணையத்திடம் தைலாபுரம் தான் பாமக அலுவலகம் என கொடுத்துள்ளேன், சட்டப்படி வெற்றி கிடைக்கும். பொய் பொய்யாக சொன்னதை கேட்டு அன்புமணியிடம் சென்ற மாவட்ட செயலாளர்கள் என்னிடம் வர வேண்டும்’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

* பொதுவெளியில் நாடகம்

ராமதாஸ் கூறுகையில், ‘கூட்டம் போடுவது, நடைபயணம் செல்வது, கிரேனில் மாலை போடுவது எல்லாம் பணத்தை கொடுத்து அன்புமணி செய்ய கூறுகிறார். கிரேனில் ஆப்பிள் மாலை போடுவது, நூறு கார் போவது எல்லாம் கட்சி கொள்கைக்கு எதிரானது. வீடு வீடாக கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க முடியவில்லை என வருத்தம் உள்ளது. அதைத் தான் அன்புமணியை செய்ய கோரினேன், அதனை செய்யவில்லை. பொதுவெளியில் அன்புமணி என்னை பற்றி விமர்சிக்காமல் உள்ளது நாடகம். வீட்டிற்குள் பேச வேண்டியதை பொதுவெளியில் அய்யா பேசுவதாக அன்புமணி கூறுகிறார்’ என்றார்.

Related News