உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார்: வழக்கறிஞர் வி.எஸ்.கோபு
சென்னை: உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார் என வழக்கறிஞர் வி.எஸ்.கோபு அறிவித்துள்ளார். ராமதாஸ், அன்புமணி இருவரும் நேரில் வருமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காலையில் கூறியிருந்தார். அன்புமணி பொதுக்குழு கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டது. வழக்கில் ராமதாஸ், அன்புமணியை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். கட்சி நலன் கருதி இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில், பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆஜராகவில்லை. இதற்கு பதில் தெரிவித்த ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு, உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் வரமாட்டார். உடல்நிலை சரியில்லை என கடிதம் வழங்கிடுமாறு ராமதாஸ் கூறிவிட்டார் என்றும் தெரிவித்தார்.
அன்புமணி நீதிமன்றம் வருவது உறுதி - கே.பாலு
நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வேண்டுகோளை ஏற்று அன்புமணி நீதிமன்றத்துக்கு வருகிறார் என வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் வராவிட்டாலும் நீதிமன்றத்து அன்புமணி வருவது உறுதி என வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.