ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்; அருள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு கோஷம்
கெங்கவல்லி: பாமக நிறுவனர் ராமதாஸ் 26ம் தேதி சேலம் பொதுக்குழுவில் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக ஆலோசிக்க இணை பொதுச் செயலாளரான சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ஆத்தூர் பயணியர் மாளிகைக்கு நேற்று வந்தார். இதையறிந்த அன்புமணி ஆதரவு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், அங்கு திரண்டு அருள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.தகவலறிந்து ஆத்தூர் டவுன் போலீசார் வந்து எச்சரிக்கை விடுத்ததால் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், அருள் எம்எல்ஏ மீது, ஆத்தூர் டிஎஸ்பியிடம் ஜெயப்பிரகாஷ் அளித்த புகாரில் அன்புமணி மீது அவதூறு பரப்பும் அருள் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அருள் எம்எல்ஏ, இன்ஸ்பெக்டரிடம் அளித்த புகாரில், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 20பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.