பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த அன்புமணியின் பேச்சுக்கு எம்.எல்.ஏ. அருள் கண்டனம்
Advertisement
அன்புமணியால் ராமதாஸுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இலந்தைப் பழம் விற்பவர்கள் கேவலமானவர்களா? அவர்களும் பாட்டாளி தோழர்கள்தான் என்று அன்புமணியின் பேச்சுக்கு எம்.எல்.ஏ. அருள் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமதாஸை அவமானப்படுத்துவது பாட்டாளி வர்க்கத்தினரையே அவமானப்படுத்துவதாகும். ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் என்றால் அன்புமணியை தலைவராக நியமித்தது எப்படி செல்லும்? பாமகவுக்கு தாய் இயக்கம் இல்லை; தாய்தான் இருக்கிறார், சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ். பாமக நிறுவனர் ராமதாஸை குழந்தை எனக் கூறுவதா பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய தாயாக திகழ்கிறார். எம்.பி., எம்எல்ஏ என்று எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ்.
Advertisement