தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நான் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பேன் - பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

சென்னை: நான் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், ‘மீண்டும் கிராமங்களை நோக்கி’ என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை நேற்று தொடங்கினார். மதுராந்தகம் அருகே சூனாம்பேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியில் ராமதாஸ் பேசியதாவது: நான் எந்தவொரு பதவியையும் விரும்பவில்லை. ஜி.கே.மணி சொன்னது போல, நான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகியிருக்கலாம்.. இப்போது துணை ஜனாதிபதி கூட தமிழர் தானே.. அனைத்து பிரதமர்களும் எனது நண்பர்கள் தான். இப்போதும் கூட பிரதமர் மோடி வந்தால் என்னைக் கட்டித்தழுவிக் கொள்வார்.

Advertisement

ஆனால், எனக்கு எந்த பதவியிலும் ஆசை இல்லை. எனது மக்கள் நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே நான் எம்எல்ஏ கூட ஆகவில்லை. நமது எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசச சொல்வேன். இதுபோல நாங்கள் ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன். எனக்குப் பதவி மீது ஆசையில்லை. நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை. என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து இவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன். நீங்கள் (பெண்கள்) நினைத்தால் இந்த ஆட்சியை எங்களிடம் கொடுத்துவிட்டால், உங்களுக்கு எல்லா வரமும் சட்டம் மூலமாக செய்து தருகிறோம்."இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி, மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், பொதுச் செயலாளர் முரளி சங்கர், மாவட்ட செயலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News