தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு தொடர்பு இல்லை : மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

மதுரை : ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி மோதல் நடைபெறும் நிலையில், அமித் ஷாவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று ராமதாஸை சந்தித்து பேசினார். இந்த நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறதா ? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "இரண்டு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்திக்கிறார்.மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்.

அமித்ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை. பாமகவில் ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் பாமக. தலைவர் ராமதாசை சந்தித்துள்ளனர். அதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலம் விரும்பி. பாமக நிச்சயமாக என்டிஏ கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறேன். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு."இவ்வாறு தெரிவித்தார்.