ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற வேலூர் சையத் இப்ராஹிம்: போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு
சென்னை: உடல் உறுப்பு தானம் முறையாக நடைபெறுகிறதா? அதற்கான ஆவணங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என பார்க்கப் போகிறேன்? என பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹிம் (49) அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குள் செல்ல முயன்றார்.
Advertisement
இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பூக்கடை போலீசார், அரசு பொது மருத்துவமனைக்குள் அத்து மீறி நுழைய முயன்றதாக கூறி அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால், அவரோ மருத்துவமனை உள்ளே செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வேலூர் இப்ராஹிமை பூக்கடை ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் கைது செய்தனர். அத்து மீறி மருத்துவமனையில் நுழைய முற்பட்டதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அைடத்தனர்.
Advertisement