100 ஜென்மங்கள் எடுத்தாலும் நடிகனாகவே பிறக்க ஆசை: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினி பேச்சு
கோவா: கோவாவில் நவ.20ம் தேதி தொடங்கிய 50வது சர்வதேச திரைப்பட விழா இன்று முடிவடைகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1975ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார் ரஜினி. தனித்துவமான நடிப்பால் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். 1975ல் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் 2025 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டை நிறைவு செய்தார்.
ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைத்துறை பயணத்தை கவுரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய அவர்; எனது திரைத்துறை பயணத்தில் பேரன்பும் ஆதரவும் அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி. என் மீது அன்பு செலுத்திய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சினிமாவும் நடிப்பும் எனக்கு எப்போதும் பிடிக்கும். 100 ஜென்மங்கள் இருந்தால் அதிலும் நடிகராகவும் ரஜினியாகவும் பிறக்கவே ஆசை. 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது வெறும் 10, 15 ஆண்டுகள் மாதிரி உள்ளன என்றும் கூறினார்.