தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜேந்திர பாலாஜியுடன் மோதல் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக கண்டன போஸ்டர்

Advertisement

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும்விதமாக ராஜேந்திரபாலாஜி பேசியிருந்தார். முன்னதாக, விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி மேடையில் அதிமுக நிர்வாகியை ராஜேந்திரபாலாஜி அறைந்ததும் சர்ச்சைக்குள்ளானது. இதனையடுத்து, ராஜேந்திரபாலாஜியின் பேச்சை கண்டித்தும், மாபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த 10ம் தேதி விருதுநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மதுரையிலும் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக நேற்று முன்தினம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இச்சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எம்ஜிஆர் கையில் சாட்டையுடன் இருப்பதுபோல், மாபா பாண்டியராஜனை கண்டிக்கும் வகையில் போஸ்டர்கள் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘போராட்டத்தை தூண்டாதே... விருதுநகருக்கு டூரிஸ்ட் போல் வந்து சென்று நேரம் பார்த்து கட்சி தாவும் பாண்டியராஜனே... ஜாதி அரசியலை தூண்டாதே... அதிமுக எம்ஜிஆர் எனும் சிவன் சொத்து. இங்கே ஜாதி அரசியலுக்கு வேலை இல்லை. இங்கே அனைவரும் சமம். திருந்திக் கொள். இல்லை வன்மையாக திருத்தப்படுவாய். சாட்டை எடுத்து ஜாதி அரசியல் பண்ணும் பாண்டியராஜனே திருந்துங்கள். எச்சரிக்கிறோம் புலித்தேவன் எழுச்சிப்படை, விருதுநகர்’’ என இருந்தது.

Advertisement