ரூ.3 கோடி வரை ஏமாற்றிய வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
11:47 AM Jul 16, 2025 IST
Share
விருதுநகர் : அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜராகினார். கடந்த மாதம் 16ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் விசாரணை தொடங்குகிறது.