தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தான் ராயல்சுக்கு தடை போடுமா ஆர்சிபி

ஜெய்பூர்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை இலக்காகக் கொண்டு களம் காண்கிறது. அந்த அணி முதல் 3 ஆட்டங்களில் லக்னோ, டெல்லி, மும்பை அணிகளை வீழ்த்தி அசத்தியுள்ளது. பேட்டிங்கில் சாம்சன், பராக், ஜுரெல், பந்து வீச்சில் சாஹல், போல்ட், பர்கர், ஆவேஷ் சிறப்பாக செயல்படுகின்றனர். அஷ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும், அதிக ரன் விட்டுக்கொடுக்காமல் சிக்கனமாகப் பந்துவீசுவதுடன் அதிரடி பேட்டிங்கில் கை கொடுகிறார். தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Advertisement

டு பிளெஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றியை சுவைத்துள்ளது. சென்னை, கொல்கத்தா, லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்த ஆர்சிபி, பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் வெற்றியை பெற்றது. கோஹ்லி, கார்த்திக் நல்ல பார்மில் இருந்தாலும்... டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல், கிரீன் பத்திதார் கணிசமாக ரன் குவிக்க முடியாமல் திணறுவது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பந்துவீச்சிலும் சிராஜ், டாப்லி, மயாங்க், யஷ் தயாள், மேக்ஸ்வெல் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Advertisement