ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு வழக்கு மாஜி முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி கைது
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்தபோது, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக தலைமை காவலர் ராம்குமார் யாதவ் பணியாற்றி வந்தார். அப்போது மாநிலத்தில் துணை ஆணையர் பதவிக்கான தேர்வு நடந்தது. ராம்குமார் யாதவின் மகன் பாரத் யாதவ் துணை ஆணையர் பதவிக்கான தேர்வை எழுதினார்.
இதில் ராம்குமார் யாதவ் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி துணை ஆணையர் தேர்வுக்கான வினாத்தாளை மகன் பாரத் யாதவுக்கு வாங்கி கொடுத்துள்ளார். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பாரத் யாதவ், உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்தார். இந்நிலையில் துணை ஆணையர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ராம்குமார் யாதவ் மற்றும் அவரது மகன் பாரத் யாதவ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.