ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சரக்கு லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் பலி!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சரக்கு லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் பலியாகினர். மதுபோதையில் இருந்த ஓட்டுநர் இயக்கிய லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஹர்மன் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சுமார் 30 முதல் 40 வாகனங்கள் மீது மோதியது. மதுபோதையில் இருந்த ஓட்டுநர் இயக்கிய லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. டிப்பர் லாரி, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என சுமார் 40 வாகனங்கள் மீது மோதியதாக சம்பவ இடத்தில் இருந்த நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தானில் நேற்று ஜோத்பூரில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். தற்போது தலைநகர் ஜெய்ப்பூரில் லாரி, வாகனங்களின் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் காவல்துறை நிர்வாகம் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.