தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு பூங்கா வளாகத்தை சுற்றி முழுவீச்சில் தூய்மைப்பணி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் சோழன் சிலை பகுதியில் உள்ள ராஜராஜன் சிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது வருகிறது.தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றவையாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

Advertisement

இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சதய விழா வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) தஞ்சை பெரியகோவிலில் தொடங்குகிறது.

விழாவின் முக்கியநிகழ்வாக 1ம் தேதி (சனிக்கிழமை) தஞ்சை பெரியகோவில் அருகே பூங்காவில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ராஜராஜசோழன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இதையொட்டி நேற்று ராஜராஜசோழன் சிலை சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மாலை அணிவிப்பதற்கு வசதியாக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூங்கா வளாகத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். புற்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.பூங்கா வளாகத்தில் கிடந்த குப்பைகளையும் அள்ளினர். மேலும் பூங்கா வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News